‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் | திரவுபதி 2: ரிச்சர்ட்சின் 'வீர சிம்ஹா கடவராயன்' தோற்றம் வெளியீடு |
சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகை ஸ்ரத்தா தாஸ் இருவரும் மும்பையில் இருந்து ஐதராபாத்திற்கு விமானத்தில் பயணித்தனர். கிளம்பி அரை மணி நேரம் ஆன நிலையில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் விமானம் மும்பையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
இந்த நிகழ்வு பற்றி ராஷ்மிகா கூறும்போது, ‛‛சாவில் இருந்து தப்பித்தோம்'' என்று விவரித்து இருந்தார். இந்த நிலையில் ராஷ்மிகாவுடன் கன்னடத்தில் பொகரு என்கிற படத்தில் நாயகனாக நடித்தவரும், மறைந்த நடிகர் சிரஞ்சீவி ஷார்ஜாவின் தம்பியுமான துருவ சார்ஜாவும் இதேபோன்று நேற்று முன் தினம் மேற்கொண்ட விமான பயணத்தில் சாவில் இருந்து மீண்டு வந்த தனது அனுபவத்தை திகிலுடன் விவரித்துள்ளார்.
துருவ சார்ஜா தற்போது நடித்து வரும் மார்ட்டின் படத்தின் படப்பிடிப்பிற்காக டில்லியில் இருந்து ஸ்ரீநகர் செல்லும் விமானத்தில் பயணம் மேற்கொண்டனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட மழை காரணமாக ஆட்டம் கண்டது. இருந்தாலும் விமானியின் சாதுரியமான நடவடிக்கையால் ஒரு வழியாக பத்திரமாக ஸ்ரீநகரில் விமானம் தரை இறங்கியது.
இதுகுறித்து துருவ சார்ஜா விமானத்தில் எடுத்துக்கொண்ட ஒரு வீடியோவை வெளியிட்டு, “சாவின் விளிம்பு வரை சென்று தப்பித்து வந்துள்ளோம். விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் தங்களது கடவுள்களை உரக்க அழைத்தபடி பிரார்த்தனை செய்தது மனதை உருக்குவதாக இருந்தது. இருந்தாலும் கடவுளின் தூதராக வந்தது போன்று விமானி எங்களை பத்திரமாக கொண்டு வந்து சேர்த்து விட்டார். அவருக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.