விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி | 'தாய்கிழவி' நல்ல லாபம்; அடுத்தடுத்து படங்களை தயாரிக்கும் சிவகார்த்திகேயன் | சூரி, ரவிக்குமார் படத்தின் கதை என்ன தெரியுமா... | என்னை வேறொரு கோணத்தில் காட்டும் படம்: ஜதின் சர்னா | பாராட்டுகளை பெற்ற 'லிட்டில் விங்க்ஸ்': உயிரோடு இல்லாத இருவர் |

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' சுருக்கமாக ‛தி கோட்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் உள்ளிட்டோர் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு சென்னை, புதுச்சேரி, ஐதராபாத், தென் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் பலகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. தற்போது சென்னை அருகே நடக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் அடுத்த மாதம் மார்ச் இறுதியில் நிறைவு பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெகு சீக்கிரம் சிங்கிள் பாடல்
இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ஒரு ரசிகர், கோட் படத்தின் சிங்கிள் பாடலை சீக்கிரம் வெளியிடுங்கள் என்று வெங்கட்பிரபுவை நோக்கி கோரிக்கை வைத்த நிலையில், வெகு விரைவிலேயே பாடல் ரிலீஸ் ஆகும் என்று பதில் கொடுத்துள்ளார்.