'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
2022ம் ஆண்டு தன்னுடைய சிநேகம் பவுண்டேஷன் பெயரை பயன்படுத்தி நடிகை ஜெயலட்சுமி பலரிடத்தில் பண மோசடியில் ஈடுபட்டதாக பாடலாசிரியர் சினேகன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். தன் மீது சினேகன் அவதூறு செய்தியை பரப்புவதாக அவர் மீது நடிகை ஜெயலட்சுமியும் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். பின்னர் இருவருமே நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி நேற்று முன்தினம் சென்னையில் உள்ள திருமங்கலம் போலீசார், அண்ணா நகரில் உள்ள நடிகை ஜெயலட்சுமியின் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தியவர்கள், அவரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தார்கள். இந்நிலையில் நேற்று மாலை ஜாமீனில் வெளியே வந்துள்ளார் ஜெயலட்சுமி. தான் வெளியே வந்ததும் தனது எக்ஸ் பக்கத்தில் அவர் ஒரு பதிவு போட்டுள்ளார் . அதில், நீதி வெல்லும். வருங்காலம் பதில் சொல்லும். எனக்காக பிரார்த்தனை செய்து கொண்ட அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.