கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

'96' பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி தனது 27வது படத்தில் நடிக்கின்றார். இதனை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. அரவிந்த் சாமி, ஸ்ரீ திவ்யா, சுவாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கும்பகோணம் பகுதியில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இதன் படப்பிடிப்பு வேலூர் பகுதியில் நடைபெற்றுறது. நேற்றுடன் கார்த்தி சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்தது. மேலும், இன்னும் இரண்டு வார படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது. இதில் கார்த்தி அல்லாத மற்ற நடிகர், நடிகைகளின் படப்பிடிப்பு நடைபெறும் என்கிறார்கள். இந்த படத்திற்கு மெய்யழகன் என பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது.