டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

மம்முட்டி நடிப்பில் சமீபத்தில் வெளியான பிரம்மயுகம் திரைப்படம் அதன் வித்தியாசமான மேக்கிங் மற்றும் புதுவிதமான கதை சொல்லல் முயற்சிக்காக மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் மம்முட்டி நடிப்பில் உருவாகி வரும் டர்போ மற்றும் பஷூக்கா ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் விதமாக தயாராகி வருகின்றன. இதில் புலிமுருகன் இயக்குனர் வைசாக் இயக்கத்தில் மம்முட்டி நடித்து வரும் டர்போ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அடுத்ததாக மம்முட்டி நடித்து வரும் பஷூக்கா படத்தில் மம்முட்டி சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன. தற்போது நடைபெற்று வரும் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இயக்குனர் கவுதம் மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய நிமிஷ் ரவி என்பவர் வேறு ஒரு படத்திற்காக பணியாற்ற சென்று விட்டார்.
இந்தநிலையில் இந்த இறுதி கட்ட படப்பிடிப்பில் புதிய ஒளிப்பதிவாளராக இணைந்து பணியாற்றி வருகிறார் மம்முட்டி நடித்த கண்ணூர் ஸ்குவாட் என்கிற வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் ரோபி வர்கீஸ் ராஜ். இவர் திரையுலகில் ஒளிப்பதிவாளராக தனது பயணத்தை தொடங்கியவர் தான். ஆனால் தற்போது இயக்குனராக மாறிவிட்ட நிலையிலும் மம்முட்டியின் மீது கொண்ட அபிமானத்தால் மீண்டும் கேமராவை தனது தோளில் தூக்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




