'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பாக்யராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் “கோவை அருகே மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குளிக்கும் நபர்களை நீருக்குள் இருக்கும் சிலர் காலை இழுத்து சென்று மூழ்கடிக்கிறார்கள். இது பணம் பறிப்பதற்காக நிகழ்த்தப்படும் திட்டமிட்ட செயல்” என தெரிவித்து இருந்தார்.
இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் மற்றும் உரிமை கண்டறியும் குழு பாக்யராஜ் புகார் ஆதாரமற்றது. இது போன்ற வதந்தியை பரப்ப வேண்டாம் என விளக்க அறிக்கை வெளியிட்டது.
இந்தநிலையில் மேட்டுப்பாளையம் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் மகளிர் மேம்பாட்டு சங்க செயலாளர் யு.மஸ்தான் என்பவர் பாக்யராஜ் மீது மேட்டுப்பாளையும் போலீசில் புகார் மனு அளித்துள்ளார். அதில் “மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா வருபவர்கள் ஆற்றில் குளிப்பது வழக்கம். அப்படி குளிக்கும்போது ஒரு சிலர் ஆழமான பகுதிக்கு சென்று விடுவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது.
பாக்யராஜ் குறிப்பிட்டது போல திட்டமிட்டு சம்பவம் நடந்ததாக போலீசார் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை. அவர் குறிப்பிட்டது போல அந்த ஆற்றில் அப்படி செய்யவும் முடியாது. அவரின் கருத்து, மேட்டுப்பாளையம் பகுதி மக்கள் மீது பிறருக்கு கோபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. மேலும் மேட்டுப்பாளையம் பகுதி மக்களில் சிலர், பிரேதத்தை கண்டறிந்து தரும் காசுக்காக கொலை செய்கிறார்கள் என்று அவதூறு பரப்புவதாகவும் அவரது வீடியோ இருக்கிறது. இது இந்த பகுதியில் தற்செயலாக இறந்தவர்களின் உறவினர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.
பவானி ஆற்றில் நடைபெறும் பல்வேறு மீட்பு பணிகளில் அந்த பகுதி மக்கள் அரசுக்கு உதவியாக இருக்கிறார்கள். இனி அவர்களை இது போன்ற பணிகளில் ஈடுபடாதவாறு தடுக்கும் வகையிலும் பாக்யராஜ் பேச்சு இருக்கிறது. எனவே வதந்தியை பரப்பிய பாக்யராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.