ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
நடிகர் விஜய் சமீபத்தில் ‛தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சி துவக்கினார். 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட போகிறார். விஜய் அரசியல் கட்சி துவங்கியதற்கு பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பிப்., 2ல் கட்சி துவங்கிய அறிவிப்பை வெளியிட்ட விஜய்க்கு நான்கு நாட்கள் கழித்து நேற்று சென்னை விமான நிலையத்தில் ‛வாழ்த்துகள்' என ஒற்றை வரியில் சொல்லிவிட்டு நகர்ந்து சென்றார் ரஜினி.
இந்நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிக்கு போன் மூலம் நன்றி தெரிவித்துள்ளார் விஜய். அப்போது தான் அரசியலில் களம் இறங்குவது, அதன் காரணம் ஆகியவற்றை அவரிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.