சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் | கதை நாயகன் ஆன இயக்குனர் ஜெகன் | கராத்தே ஹுசைனிக்கு தமிழக அரசு 5 லட்சம் உதவி | பிளாஷ்பேக்: மோசமான தோல்வியை சந்தித்த ரஜினி படம் | பிளாஷ்பேக் : கிருஷ்ணராக நடித்த நடிகை |
பொங்கலுக்கு வெளியான படங்களில் நேரடியாக போட்டியில் இருந்த படங்கள் 'அயலான், கேப்டன் மில்லர்'. இரண்டு படங்களில் எந்தப் படம் சிறப்பாக இருந்தது, எது வசூலைக் குவித்தது என சிவகார்த்திகேயன், தனுஷ் ரசிகர்கள் படம் வெளியான பின் சமூக வலைத்தளங்களில் ஒருவர் மீது மற்றவர் கமெண்ட் செய்து சண்டையிட்டு வந்தார்கள்.
தியேட்டர் வெளியீட்டில் ஏற்பட்ட போட்டி, இப்போது ஓடிடி தளத்திலும் வரப் போகிறது. இரண்டு படங்களுமே நாளை(பிப்., 9) ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளது. 'கேப்டன் மில்லர்' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 'அயலான்' படம் எத்தனை மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறித்து சரியாக அறிவிக்கப்படவில்லை. தமிழில் மட்டும் வெளியாகிறது என்பது மட்டும் உறுதி.
'அயலான்' படம் சில சட்டச் சிக்கல்கள் காரணமாக தெலுங்கில் இதுவரை வெளியாகவில்லை. ஜனவரி 26ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டு திடீரென தள்ளி வைக்கப்பட்டது. அதற்கான காரணத்தைக் கூட தயாரிப்பு நிறுவனம் சொல்லவில்லை.
தெலுங்கில் உள்ள சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஓடிடியில் படம் நேரடியாக வெளியாகுமா என்று கேட்டு வருகிறார்கள். அதற்கு படக்குழுவினர் கூட எந்தவித பதிலையும் சொல்லவில்லை. தெலுங்கில் 'அயலான்' படத்திற்கு வெளியீட்டிற்கு முன்பு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. டிரைலருக்கு 5 மில்லியன் பார்வைகள் கிடைத்தது. அப்படிப்பட்ட வரவேற்பை வசூலாக மாற்ற படக்குழு தவறிவிட்டது.