குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
டைம் டிராவலை மையப்படுத்தி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இன்று நேற்று நாளை என்கிற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆர்.ரவிக்குமார். அந்த படத்திற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து அயலான் என்கிற படத்தை இயக்கினார். நீண்ட காத்திருப்புக்கு பிறகு சமீபத்தில் வெளியான அந்த படமும் ஓரளவு வரவேற்பை பெறவே செய்தது. தற்போது அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ரவிக்குமார்.
கடந்த 2016ல் பிரியா கணேசன் என்பவரை திருமணம் செய்து கொண்ட ரவிக்குமாருக்கு 2018ல் நறுமுகை என்கிற பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தற்போது இந்த தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. “எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறான்.. உங்கள் அன்பு வாழ்த்துக்களால் வளம் பெறுவான்” என்று தனது விரலை பிடித்துக்கொண்டு இருக்கும் குழந்தையின் பிஞ்சு விரல்களை பற்றிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இந்த தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ரவிக்குமார்.