ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் | ''முன்பு காட்டியதை விட ஷூட்டிங்கில் சிறிய உடை கொடுப்பார்கள்'' : மும்தாஜ் பகிர்ந்த வேதனை அனுபவங்கள் | தனுஷ் 55வது பட வெளியீடு எப்போது தெரியுமா? | 'புருஷன்' படத்தின் படப்பிடிப்பில் சுந்தர்.சி தீவிரம்! | துருவ் விக்ரமிற்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்! | மீண்டும் தெலுங்கு நடிகரை வைத்து படம் இயக்கும் லிங்குசாமி! | ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போன அஜித் படம்! | ரஜினி 173வது படத்தின் முக்கிய அப்டேட்! | 63 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'பெத்தி' டிரைலர் | இந்த வாரம், புதிய படங்கள் இல்லையா ? |

பொங்கலுக்கு வெளிவந்த படங்களில் தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' படத்திற்கும், சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' படத்திற்கும் இடையேதான் போட்டி நிலவியது. தனுஷ் படத்தை விட சிவகார்த்திகேயன் படம் சில கோடிகள் வசூலில் முந்தியிருப்பதாகச் சொல்கிறார்கள்.
விமர்சன ரீதியாக 'கேப்டன் மில்லர்' பாராட்டுக்களைப் பெற்றாலும் 'காப்பி கதை' என்ற புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதனால், படம் மீதான இமேஜ் குறைந்துவிட்டது.
இந்நிலையில் இந்த இரண்டு படங்களின் தெலுங்கு டப்பிங்கும் ஜனவரி 26ம் தேதி வெளியாக உள்ளது. தமிழில் வெளியான போதே அப்படங்களைத் தெலுங்கில் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், நேரடி தெலுங்குப் படங்களுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும் என அங்கு சர்ச்சை எழுந்தது. அதனால், இந்த இரண்டு படங்களின் வெளியீடும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இரண்டு படங்களுக்கும் தமிழில் என்ன மாதிரியான 'ரிசல்ட்' என்பது தெலுங்கு ரசிகர்களுக்கும் தெரிந்திருக்கும். இருப்பினும் அங்கு எந்தப் படம் வரவேற்பைப் பெறப் போகிறது என தனுஷ் ரசிகர்களும், சிவகார்த்திகேயன் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். தெலுங்கில் இந்த இரண்டு படங்களும் ஓடும் நேரம், தமிழை விட சில நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது.




