ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை | பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் | பிளாஷ்பேக்: வில்லத்தனத்தில் மிரட்டி, வறுமையில் வாடிய நடிகை | ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல் | மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி? |

தெலுங்கில் பொங்கலை முன்னிட்டு மகேஷ் பாபு நடித்த 'குண்டூர் காரம்', வெங்கடேஷ் நடித்த 'சைந்தவ்', நாகார்ஜுனா நடித்த 'நா சாமி ரங்கா' ஆகிய படங்களுடன் இளம் ஹீரோவான தேஜா சஜ்ஜா நடித்த 'ஹனு மான்' படமும் வெளியானது. இதில் தேஜா நடித்த 'ஹனு மான்' படம் 200 கோடி வசூலைக் கடந்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தின் மூலம் இதுவரையில் 70 கோடிக்கும் அதிகமான லாபம் கிடைத்துவிட்டது என்கிறார்கள்.
அதே சமயம் 'குண்டூர் காரம்' படம் 231 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். இருப்பினும் அதிக பொருட்செலவில் இப்படம் தயாராகி உள்ளதால், குறைவான லாபம் மட்டுமே கிடைக்கும் என்று தகவல். 'ஹனுமான்' படம் தந்த 200 கோடி வசூலில் லாபம் மட்டுமே 70 கோடி வந்துவிட்டதாம். படத்தின் வியாபாரத்தை விட வசூல் மிக அதிகம் என்பதே அதற்குக் காரணம்.
இளம் முன்னணி நடிகர் மற்ற சீனியர் நடிகர்களை முந்தி பெரிய வெற்றியையும், வசூலையும் குவித்திருப்பது தெலுங்கில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.




