மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

வெங்கட் பிரபு இயக்கி வரும் ‛கோட்' படத்தில் 50 வயது மற்றும் 25 வயது என இரண்டு விதமான வேடங்களில் நடித்து வருகிறார் விஜய். இதில் அவர் இளமையாக நடிக்கும் வேடம் ‛டீ ஏஜிங் டெக்னாலஜி' மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காகத்தான் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு அமெரிக்கா சென்றிருந்தார் விஜய்.
இந்த நிலையில் ‛வேட்டையன்' படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171வது படத்தில் ரஜினியும் இளமையான வேடத்தில் நடிக்கப் போகிறாராம். அதனால் இந்த படத்திலும் டீ ஏஜிங் டெக்னாலஜியை பயன்படுத்த போகிறார் லோகேஷ் கனகராஜ். அதனால் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு ரஜினியும் லோகேஷ் கனகராஜும் அமெரிக்கா செல்வார்கள் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் ரஜினி ஒரே வேடத்தில்தான் நடிக்கிறாரா? இல்லை இரண்டு வேடங்களில் நடிக்கிறாரா என்பது தெரியவில்லை. வருகிற ஏப்ரல் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.