ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான 'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவனத்துக்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் வாங்கிய 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்த தொகையை விஷால் நடித்து, தயாரித்து வெளிவரும் படங்களின் மூலம் திருப்பித் தர வேண்டும் என்பது ஒப்பந்தமாகும். ஆனால் ஒப்பந்தப்படி விஷால் திருப்பிக் கொடுக்காததால் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2021ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி 15 கோடி ரூபாயை வங்கி கணக்கில் டெபாசிட் செய்யவும், சொத்து விவரங்களை தாக்கல் செய்யவும் நடிகர் விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பினரும் கணக்குகளை சரிபார்க்க கோர்ட் சார்பில் ஆடிட்டர் நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ய ஶ்ரீகிருஷ்ணா என்ற ஆடிட்டிரை நியமித்து உத்தரவிட்டது. இரு நிறுவனங்களின் 3 வருட கணக்குகளையும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.