'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் சிரஞ்சீவி. ஆந்திர அரசியலில் குதிக்க நினைத்த சிரஞ்சீவி 2008ம் ஆண்டு 'பிரஜா ராஜ்யம்' என்ற கட்சியை தொடங்கினார். ஒன்றுபட்ட ஆந்திராவின் அடுத்த முதல்வர் அவர் என்று கணிக்கப்பட்ட நிலையில் 2009ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெறும் 18 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று பெரும் தோல்வியை சந்தித்தார். அதன் பிறகு தேசிய அரசியலில் கவனம் செலுத்திய சிரஞ்சீவி, தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார்.
2012ம் ஆண்டு மத்திய சுற்றுலாத்துறை இணை அமைச்சர் ஆனார். அதற்கு பிறகு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்ததும் அரசியலில் இருந்து விலகினார் சிரஞ்சீவி. இனி சினிமாவில் கவனம் செலுத்தப்போவதாக அறிவித்தவர் மளமளவென படங்களில் நடித்தார். ஆனால் ஒரு சில படங்கள் தவிர பெரும்பாலான படங்கள் தோல்வியை சந்தித்தன.
இந்த நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் பாரதிய ஜனதா இரு மாநிலங்களுக்குமான ஒரு நட்சத்திர தலைவரை தேடி கொண்டிருந்தது. தற்போது அது குறிவைத்திருப்பது சிரஞ்சீவிக்கு. ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கானாவில் காங்கிரஸ் இருவரை எதிர்க்க தகுதியான ஒருவராக சிரஞ்சீவியை பார்க்கிறது. ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் சிறப்பு அழைப்பு, பத்மவிபூஷன் விருது என சிரஞ்சீவியும் பாரதிய ஜனதா கட்சிக்கு நெருக்கமாகிறார். விரைவில் அவர் உத்தர பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
வருகிற பார்லிமென்ட் தேர்தலுக்கு முன்பாகவே சிரஞ்சீவி பாரதி ஜனதா கட்சியில் தன்னை இணைத்து கொள்வார் என்றும், ஆந்திர மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக நியமிக்கப்படுவார் என்றும் ஆந்திர மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுபற்றி சிரஞ்சீவி தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.