அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் பண்முக திறமைகளை கொண்ட நடிகர். தனது 50வது படத்தை இயக்கி, நடித்து முடித்துள்ளார். தற்போது மூன்றாவதாக ‛நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படம் இன்றைய இளைஞர்களின் காதலை மையப்படுத்தி உருவாகிறது. இதுதவிர சேகர் கம்முலா இயக்கும் தனது 51வது படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று திடீரென சமூக வலைதளத்தில் தனுஷ் அடுத்து இயக்கி வரும் படத்தில் நடிப்பதற்காக ஆடிசன் நடைபெற உள்ளதாக பரவியது. இதனைத்தொடர்ந்து தனுஷின் மேலாளர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் "தனுஷ் சாரின் புதிய படத்தில் நடிப்பதற்காக நடிகர், நடிகைகள் தேவைப்படுகிறது இதற்கு தொடர்பு கொள்ள என் பெயர், மொபைல் நம்பர் என சமூக வலைதளங்களில் பரவியது உண்மை அல்ல முற்றிலும் பொய். இதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்" என பதிவிட்டுள்ளார்.