என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
சந்தானம் நடித்துள்ள படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி உள்ள படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. பேண்டசி த்ரில்லர் வகை படமாக உருவாகி உள்ளது. இந்த படம் நாளை 600 தியேட்டர்களில் வெளியாக இருப்பதாக படத்தை விநியோகிக்கும் ரோமியோ பிக்ர்சஸ் நிறுவனத்தின் சார்பில் அதன் உரிமையாளர் ராகுல் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
“வடக்குப்பட்டி ராமசாமி' படம் அறிவித்ததில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தானம், இயக்குநர் கார்த்திக் யோகி இதற்கு முன்பு 'டிக்கிலோனா' படம் மூலம் ஹிட் கொடுத்தனர். அந்த இணை இப்போது மற்றொரு தனித்துவமான பொழுதுபோக்கு படத்துடன் மீண்டும் வருகிறார்கள் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு காரணம். இப்படம் நாளை உலகம் முழுவதும் திரைக்கு வரவிருக்கும் நிலையில், 600 திரைகளில் படம் வெளியிடப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார்.
இந்த படத்தில் மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி, எம்.எஸ்.பாஸ்கர், மாறன், தமிழ், நான் கடவுள் ராஜேந்திரன், ஜான் விஜய், ரவிமரியா, சேசு, சுரேஷ், பிரசாந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார், தீபக் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீப்பிள் மீடியா பேடரி சார்பில் டி.ஜி.விஸ்வ பிரசாத் தயாரித்துள்ளார்.