'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பா ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா, துஷாரா மற்றும் பலர் நடிப்பில் 2021ம் ஆண்டு ஒடிடி தளத்தில் வெளிவந்த படம் 'சார்பட்டா பரம்பரை'. இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்ற ஒரு படம்.
இப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பை கடந்த வருடம் மார்ச் மாதம் வெளியிட்டார்கள். ஆனால், அதன்பின் படம் எப்போது ஆரம்பமாகும் என்பது தெரியாமலேயே இருந்தது. 'தங்கலான்' படத்தை முடித்த பிறகுதான் பா ரஞ்சித் இந்தப் படத்தின் வேலைகளை ஆரம்பிப்பார் என்று தகவல் வெளியானது. தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் 'தங்கலான்' படம் உள்ளது. ஏப்ரல் மாதம் படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் 'சார்பட்டா பரம்பரை 2' படத்திற்கான குத்துச்சண்டைப் பயிற்சியை ஆர்யா ஆரம்பித்துள்ளார். அவருடைய சமூக வலைத்தளத்தில் பயிற்சி பெறும் வீடியோ ஒன்றை ஆர்யா பதிவிட்டுள்ளார். அதனால், விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகலாம் எனத் தெரிகிறது.