கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி | 2025 - வசூல் படங்களில் முதலிடத்தைப் பிடிக்குமா 'காந்தாரா சாப்டர் 1' ? | விஷால் - சுந்தர் சி கூட்டணி படத்தின் அறிவிப்பு… விரைவில்… | மனிஷாவுக்கு கை கொடுக்குமா 'மெஸன்ஜர்' |
நடிகரும், இயக்குநருமான பார்த்திபனின் புதிய படம் 'டீன்ஸ்'. பர்ஸ்ட் லுக்கிற்கு தணிக்கை சான்றிதழ் பெற்ற முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் பார்த்திபன் பேசியதாவது: நான் கடந்த 34 வருடங்களாக சினிமா துறையில் இருக்கிறேன். வித்தியாசமான படங்களை உருவாக்குகிறேன் என்று எல்லோரும் சொல்கிறார்கள். சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு செய்கிறேன். இந்தப் படத்தின் முதல் பார்வையை திரையரங்குகளில் வெளியிட நினைத்தேன், ஆனால் அதற்கு சென்சார் சான்றிதழ் தேவைப்பட்டது. சென்சார் அதிகாரிகளை நான் அணுகியபோது, ஒரு படத்தின் முதல் பார்வைக்கு சான்றிதழ் அளிப்பது இதுவே முதல்முறை என்றார்கள். உடனடியாக நான் அதை பெறுவதற்கான வேலையை செய்தேன், இப்படித்தான் இது சாத்தியமானது.
இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் தான் 'டீன்ஸ்' உருவாவதற்கு முக்கிய காரணம். 'இரவின் நிழல்' படத்தை அவர்கள்தான் தயாரித்தனர். முதல் நான்-லீனியர் சிங்கிள்-ஷாட் படம் என்ற அங்கீகாரத்தை அது எனக்குக் கொடுத்தாலும், அவர்களுக்கு அதிகப் பணத்தை 'இரவின் நிழல்' ஈட்டித் தரவில்லை. இந்தப் படம் அவர்களுக்கு லாபம் தரும் என்று நம்புகிறேன். ஏனென்றால் 13 குழந்தைகளை முக்கிய வேடத்தில் நடிக்க வைத்து குழந்தைகளுக்காக இந்த படத்தை உருவாக்கியுள்ளேன். இந்தப் படம் சோதனை முயற்சியாக இருக்காது, அதே சமயம் முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.
இமானுடன் நீண்ட காலமாக பணியாற்ற விரும்பினேன், அது இப்போதுதான் நடந்துள்ளது. எனது அடுத்த படத்திற்கு வேறு ஒரு இசையமைப்பாளருடன் இணைந்து பணியாற்ற நினைத்தேன், ஆனால் இப்போது இமானுடன் தொடர்ந்து பணிபுரிய முடிவு செய்துள்ளேன். 'டீன்ஸ்' படம் வெளியாவதற்கு முன்பே உலக அளவில் அங்கீகாரம் பெற்றிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு பார்த்திபன் பேசினார்.