2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை மமிதா பைஜு. 'சர்வோபுரி பாலக்காரன்' படத்தில் அறிமுகமான அவர் அதன் பிறகு, டாகினி, வரதன், ஸ்கூல் டைரி, ஆபரேஷன் ஜீவா, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது 'ரிபெல்' படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். இதில் அவர் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் நிகேஷ் இயக்கி உள்ளார். இதில் கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கடேஷ் வி.பி, ஆதித்யா பாஸ்கர், 'கல்லூரி' வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வரும் மார்ச் மாதம் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மமிதா பைஜுக்கு தமிழ் சினிமாவில் தகுந்த இடம் கிடைக்குமா என்பது படம் வெளிவந்ததும் தெரிய வரும்.