அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
சினிமா மற்றும் சின்னத்திரையில் கடந்த 2007ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடித்து வருகிறார் ஸ்ரீரித்திகா. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடித்ததில் திருமுருகனுடன் ஜோடி சேர்ந்து நடித்த நாதஸ்வரம் சீரியலில் ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட்டாக உள்ளது. இந்நிலையில், ஷானீஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் ஸ்ரீரித்திகா நாதஸ்வரம் சீரியல் நடித்த போது வந்த வதந்திகள் தனக்கு பெரிய தலைவலியாக அமைந்ததாக அண்மையில் அளித்துள்ள பேட்டியில் பேசியுள்ளார்.
அதில், 'என்னை பற்றி யாரும் தவறாக பேசிவிடமுடியாது. அந்த அளவிற்கு என் அம்மா என்னை வளர்த்திருக்கிறார். ஆனால், நாதஸ்வரம் சீரியலில் நடித்த போது நிறைய வதந்திகள் வந்தது. இயக்குநர் திருமுருகன் என்னை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும் பலரும் செய்திகள் பரப்பினர். அந்த நேரத்தில் அந்த வதந்திகள் என்னை மிகவும் பாதித்தது' என்று கூறியுள்ளார்.