தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட முதல் பெண் வேலு நாச்சியார். இவர் தமிழகத்தில் சிவகங்கை பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழில் இவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாக்க நிறைய புதுமுகங்கள் முயற்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தூங்காவனம், கடாரம் கொண்டான் ஆகிய படங்களை இயக்கிய ராஜேஷ் எம். செல்வா இப்போது வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். இதில் வேலு நாச்சியார் ஆக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.