''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
2024ம் ஆண்டு பொங்கல் தமிழ், தெலுங்கில் சில சர்ச்சைகளை ஏற்படுத்திய பொங்கலாக அமைந்தது. தமிழிலிருந்து தெலுங்கிற்கு டப்பிங் ஆன படங்களை ஒரே சமயத்தில் வெளியிட தெலுங்குத் திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், 'அயலான், கேப்டன் மில்லர்' படங்களால் அங்கு வெளியாக முடியவில்லை. இந்த வாரம் ஜனவரி 26ம் தேதிதான் வெளியாகிறது.
இதனிடையே, தெலுங்கில் பொங்கலுக்கு வெளியான படங்களில் மகேஷ் பாபு நடித்த 'குண்டூர் காரம்' படம் 230 கோடி வசூலையும், இளம் நடிகர் தேஜா சஜ்ஜா நடித்த 'ஹனுமான்' படம் 200 கோடி வசூலையும் கடந்துள்ளது. தெலுங்கில் வெளியான 4 படங்களில் 2 படங்கள் 200 கோடி வசூலைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
அதே சமயம் தமிழில் வெளியான 4 படங்களில் 2 படங்களான 'அயலான், கேப்டன் மில்லர்' ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே 75 கோடி வசூலைக் கடந்துள்ளதாகச் சொல்கிறார்கள். ஆனாலும், அந்தப் படங்கள் 100 கோடி வசூலைக் கடக்க தடுமாறி வருகின்றன. 2024ம் ஆண்டின் ஆரம்பத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படங்களின் வசூல் எதிர்பார்த்த அளவு இல்லை என்ற வருத்தத்தில் தியேட்டர்காரர்கள் இருக்கிறார்கள்.
அடுத்து வரும் சில பெரிய படங்களாவது எதிர்பார்ப்பை மீறி வசூலிக்குமா என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.