தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

'தாமிரபரணி, பூஜை' படங்களுக்குப் பிறகு இயக்குனர் ஹரி, நடிகர் விஷால் மீண்டும் இணைந்துள்ள படம் 'ரத்னம்'. இந்தப் படமும் ஒரு ஆக்ஷன் படமாகத்தான் படமாகி வருகிறது. பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்கிறார்.
இப்படத்திற்கான தன்னுடைய படப்பிடிப்பை முடித்துவிட்டார் விஷால். அது குறித்து, “யெஸ், யெஸ், யெஸ்… 'ரத்னம்' படத்தின் முழு படப்பிடிப்பையும் முடித்துவிட்டேன். ஹரி சாருடன் மூன்றாவது முறையாகவும் மற்றும் டார்லிங் ஒளிப்பதிவாளர் சுகுமார், மொத்த குழுவுடன் இணைந்து பணியாற்றியது உண்மையாகவே மகிழ்ச்சி. தூத்துக்குடி, திருச்சி, காரைக்குடி, வேலூர், திருப்பதி, சென்னை என ஆரம்பம் முதல் ஒரு நேர்மறையான சூழலில் பணி புரிந்தது வாழ்க்கையில் எப்போதும் மறக்க முடியாத ஒன்று.
படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் மற்றும் குழுவினருக்கு நன்றி. விரைவில் டார்லிங் தேவிஸ்ரீ பிரசாத்தின் சூப்பரான சிங்கிள் டிராக்கை வெளியிட உள்ளோம். ஆக்ஷன் படப் பிரியர்களுக்கு இப்படம் கொண்டாட்டமாக இருக்கும்.
இந்த குடும்பப் பாங்கான படம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் விதத்தில் திரையில் பார்ப்பதற்கு இருக்கும். இது கோடை விடுமுறை டிரீட். விரைவில் பட வெளியீடு பற்றிய அறிவிப்பு வரும். நன்றி, கடவுள் ஆசீர்வதிக்கட்டும்,” என விஷால் குறிப்பிட்டுள்ளார்.