கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? |
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடித்த 'அயலான்' படத்தை ஆர்.ரவி குமார் இயக்கி உள்ளார். பல்வேறு பிரச்னைகளால் நீண்டநாள் தயாரிப்பில் இருந்த இந்த படம் ஒரு வழியாக நேற்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. கடைசி நிமிடம் வரை கடும் போராட்டத்திற்கு பிறகு படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சம்பளம் பெறாமல் நடித்தார் சிவகார்த்திகேயன். கடைசியாக தயாரிப்பாளரின் 25 கோடி ரூபாய் கடனுக்கு பொறுப்பேற்று படத்தை வெளியிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
நேற்று படம் வெளியானதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தளத்தில் எழுதியிருப்பதாவது : வெற்றி பெறும் ஒவ்வொரு மனிதன் பின்னாலும் ஒரு வலி மிகுந்த கதை இருக்கும். அந்த வலி மிகுந்த கதை ஒரு வெற்றிகரமான முடிவைத் தரும். அந்த வலியை ஏற்றுக் கொண்டு வெற்றிக்குத் தயாராகுங்கள். என பதிவிட்டுள்ளார்.