69வது படம் : வினோத்திற்கு விஜய் போட்ட உத்தரவு | அஜித், கமல் வழியைப் பின்பற்றுவார்களா ரஜினி, விஜய்? | கிடைத்த வாய்ப்பை மிஸ் பண்ணிவிட்டேன்: அஜித் உடன் இணைவது குறித்து விஷ்ணுவர்தன் தகவல் | நவ., 22ல் ரிலீஸாகும் மிருணாள் குல்கர்னியின் ‛தாய் ஆகர்' | முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நடிகை கஸ்தூரி | பாலகிருஷ்ணாவிடம் சூர்யாவை மாட்டி விட்ட கார்த்தி | குபேரா படம் பற்றி ராஷ்மிகா வெளியிட்ட அப்டேட் | 2024 - தீபாவளி படங்கள் கற்றுத் தந்த பாடம் என்ன? | 'புஷ்பா 2' பதிவுகளை புறக்கணிக்கும் தேவி ஸ்ரீ பிரசாத் | விடை பெற்றார் நடிகர் டெல்லி கணேஷ் ; வான் படை சார்பில் அஞ்சலி : உடல் தகனம் |
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'கேப்டன் மில்லர்' படம் நேற்று வெளியானது. இதில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுதந்திர போராட்ட காலத்தில் உள்ளூர் ஜமீன்தாருக்கு எதிராகவும், ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் போராடிய ஒரு இளைஞனை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது.
இந்த படத்தின் முதல் நாள் ஓப்பனிங்கை தனுஷ் ரசிகர்கள் பிரமாண்டமாக கொண்டாடினார்கள். பொங்கல் விடுமுறை என்பதால் வருகிற 17ம் தேதி வரை தியேட்டர் முன்பதிவுகள் நன்றாகவே உள்ளது. ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படத்தை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், தனுஷை நேரில் சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்தினார். அந்த படத்தை படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'சத்யஜோதி பிலிம்ஸ்' தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு உள்ளது. அதன் உடன், 'வின்னர் வின்னர் கேப்டன் மில்லர்... உலகம் முழுவதும் இந்த பிளாக்பஸ்டர் வரவேற்பை கொடுத்த ரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் நன்றி' என்று குறிப்பிட்டுள்ளனர்.