டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ரகு தாத்தா. எம். எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதில், என்சிசி பயிற்சியில் ஹிந்தியில் பேசும் போது, தமிழ்ல சொல்லுங்க சார் எனக்கு ஒண்ணுமே புரியல என்று சொல்ல தொடங்கி படம் முழுக்க ஹிந்திக்கு எதிர்ப்பை பதிவு செய்யும் காட்சிகளில் நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
அவர் ஹிந்திக்கு எதிராக பேசும் வசனங்கள் மட்டுமின்றி கரும்பலகையில் ஹிந்தியை அழிப்பது, ஹிந்தியில் தேர்வு எழுதினால் தான் எங்களுக்கு ப்ரோமோஷன் கிடைக்குமா? அப்படி என்றால் அந்தப் பிரமோசனே எங்களுக்கு தேவையில்லை என்று மேலதிகாரியிடம் சொல்லும் காட்சியிலும் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்துவது என்னுடைய கருத்து. வெகுஜனங்களுக்கு போய் சேர வேண்டும் என்றால் நான் மெட்ராஸ் போக வேண்டும் என்று சொல்வது என கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்த காலகட்டத்தில் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு அத்தனை எதிர்ப்புகளையும் மீறி ஹிந்தியை திணித்தே தீருவோம் என்றால் ஹிந்தி தெரியாது போய்யா என்று சொல்லுவோம் என கீர்த்தி சுரேஷ் பேசும் வசனம் இந்த டீசரில் அமைந்திருக்கிறது.
இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றுள்ளது.
கீர்த்தி சுரேஷ் தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, ஹிந்தியிலும் கவனம் செலுத்தி வருகிறார். அப்படியிருக்கையில், ஹிந்தி தெரியாது என படத்தில் பேசி, தேவையில்லாத வீண் சர்ச்சையில் சிக்கியுள்ளார். டீசரில் இடம்பெற்ற வசனங்களுக்கு ஒருசிலர் ஆதரவு தெரிவித்தாலும், பலரும் ஹிந்தி படத்தில் நடிக்க ஆசைப்படும்போது ஹிந்தி எதிர்ப்பு வசனம் தேவையில்லாதது என கருத்து தெரிவித்துள்ளனர்.