ரஜினியின் ஜெயிலர் 2 வில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | மகாராஜா படத்தால் அனுராக்கிற்கு ஆஸ்கர் இயக்குனரிடம் வந்த அழைப்பு | ஏழு மலை ஏழு கடல் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரீ ரிலீஸ் ஆகும் ரஜினி முருகன் | ஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் டெஸ்ட் | கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி உடன் இணைந்து பொங்கல் கொண்டாடிய விஜய் | கேம் சேஞ்சர் படத்தின் ரிசல்ட் ஏமாற்றம் அளிக்கிறது : இயக்குனர் ஷங்கர் | அனுஷ்காவின் காதி படத்தில் முக்கிய வேடத்தில் விக்ரம் பிரபு | பெரிய படங்ளை வாங்கிய ஓடிடி நிறுவனம் | நட்புக்காக கெஸ்ட் ரோலில் நடித்ததுடன் சக்சஸ் மீட்டிலும் கலந்து கொண்ட மம்மூட்டி |
நடிகர் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‛இந்தியன் 2' படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்தது. அடுத்தப்படியாக கமல் தற்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் ‛கல்கி 2898 ஏடி' படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர மணிரத்னத்தின் தக் லைப் படம் மற்றும் வினோத் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க உள்ளார்.
இந்த படங்கள் ஒவ்வொன்றாக துவங்க உள்ளன. கமல் நடித்து வரும் படங்களில் அவரும் ஒரு தயாரிப்பாளராக உள்ளார். இதுதவிர சிம்பு 48வது படம், சிவகார்த்திகேயன் 21வது படம் உள்ளிட்ட சில படங்களையும் தயாரிக்கிறார்.
இந்நிலையில் கமலின் 237வது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதை இரட்டையர்களான ஸ்டன்ட் இயக்குனர்கள் அன்பறிவு இயக்குகின்றனர். முழுக்க முழுக்க ஆக் ஷன் படமாக உருவாகிறது. 2025ல் படம் துவங்குகிறது.