பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் | பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நீக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் காட்சிகள் | பிக் பாஸ் தெலுங்கு : தொகுப்பாளராகத் தொடரும் நாகார்ஜுனா | 'கேம் சேஞ்ஜர்' தோல்விக்குப் பிறகான விரிசல் |
இந்தியன் 2 படத்திற்கு பின் கமல் நடிப்பில் தயாராகி உள்ள படம் ‛தக் லைப்'. மணிரத்னம் இயக்க, சிலம்பரசன், ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தபடம் அடுத்தாண்டு வெளியாக உள்ளது. இதனிடையே தக் லைப் படத்தை முடித்த கையோடு அமெரிக்காவில் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பற்றி படிக்க 2 மாத காலம் அமெரிக்கா சென்றுள்ளார் கமல். விரைவில் அவர் நாடு திரும்ப உள்ளார்.
அடுத்து கமல் ஏற்கனவே அறிவித்தபடி ஸ்டன்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவு இயக்கத்தில் அவரது 237வது படத்தில் நடிக்க உள்ளார். இது இவர்கள் இயக்கும் முதல் படமாகும். முழுக்க முழுக்க ஆக் ஷன் பாணியில் இந்தப்படம் உருவாக உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் அன்பறிவு சகோதரர்கள் சிக்காகோவில் கமலை சந்தித்து இப்படம் தொடர்பான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பான போட்டோ வெளியாகி உள்ளது.