'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது விஜய் நடிப்பில் லியோ படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் படங்களை பொறுத்தவரை கதைக்கு தேவையான முக்கிய நட்சத்திரங்களை பெரும்பாலும் மலையாளதில் இருந்து தேர்ந்தெடுப்பது வழக்கம். அந்த வகையில் லியோ படத்தில் பிரபல மலையாள வில்லன் நடிகர் பாபு ஆண்டனி முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் பாபு ஆண்டனியும் அவரது மகன் ஆர்தரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமீபத்தில் சோஷியல் மீடியாவில் வெளியானது.
இந்த படத்திற்காக தான் தேர்வான விதம் குறித்து சமீபத்தில் பாபு ஆண்டனி கூறும்போது, மலையாளத்தில் தற்போது விரைவில் வெளியாக உள்ள ஆர்டிஎக்ஸ் என்கிற படத்தில் ஒரு ஆக்சன் கதாபாத்திரத்தில் தான் நடித்திருப்பதாகவும் லியோ படத்தின் ஸ்டன்ட் மாஸ்டர்களான அன்பறிவு மாஸ்டர்கள் தான் அந்த படத்திலும் பணியாற்றினார்கள் என்றும் அந்த சண்டைக் காட்சிகளை எடிட் செய்யும்போது ஏதேச்சையாக தன்னை பார்த்த லோகேஷ் கனகராஜ் இந்த வயதிலும் இவ்வளவு பிட் ஆக இருக்கிறாரே கூப்பிடுங்க அவரை என்று கூறி இந்த படத்திற்கு தன்னை அழைத்து ஒப்பந்தம் செய்தார் என்று கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் மட்டுமல்ல நடிகர் விஜய்யும் கூட இந்த படத்தின் படப்பிடிப்பின் போது பாபு ஆண்டனியிடம் அவர் நடித்த பூவிழி வாசலிலே, சூரியன், விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய படங்களுக்கு தாங்கள் ரசிகர்கள் என்றும் கூறி அவரை ஆச்சரியப்படுத்தினார்களாம்.