2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

'பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா, வீர தீர சூரன்' என பல படங்களை இயக்கியவர் அருண்குமார். இவர் கமல்ஹாசனை சந்தித்து ஒரு கதை சொல்லி ஓகே செய்துள்ளார். அந்த கதை கமலுக்கு பிடித்து விட்டதை அடுத்து அப்படத்தை தனது ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக தயாரித்து நடிப்பதற்கு தயாராகி வருகிறார்.
அதோடு ஏற்கனவே ஸ்டன்ட் இயக்குனர்கள் அன்பறிவ் இயக்கும் தனது 237வது படத்தில் தக்லைப் படத்திற்கு பிறகு நடிக்க திட்டமிட்டிருந்தார் கமல்ஹாசன். ஆனால் அந்த கதையில் அவருக்கு போதுமான திருப்தி ஏற்படாததால் தற்போது மொத்த ஸ்கிரிப்ட்டையும் மாற்றுமாறு கூறியிருக்கிறார். அதனால் அப்படத்திற்கான புதிய ஸ்கிரிப்ட் எழுதும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதனால் தனது 237வது படத்தை அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ள கமல்ஹாசன், அதற்குள் அருண்குமார் இயக்கும் படத்தில் நடித்து முடிக்க திட்டமிட்டுள்ளாராம்.