இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

பிரபல நகைச்சுவை நடிகரான மயில்சாமியின் இரண்டாவது மகன் யுவன் மயில்சாமி சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள 'தங்க மகள்' தொடரில் யுவன் ஹீரோவாக நடிக்கிறார். அதேசமயம் திரையுலகிலும் சில படங்களில் நடித்து வரும் யுவன், ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம், வேட்டையன் ஆகிய படங்களிலும் அவருடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்நிலையில் ரஜினிகாந்தை சந்திக்க சென்ற யுவனை ரஜினிகாந்தின் உதவியாளர் அட்டக்கத்தி படத்தில் வரும் தினேஷ் என்று நினைத்து அழைத்து சென்று ரஜினிகாந்தை சந்திக்க வைத்தாராம். அப்போது ரஜினிகாந்த் யுவனை மறக்கமால் ஞாபத்தில் வைத்துக்கொண்டு தனது உதவியாளரிடம் இது மயில்சாமியின் மகன் யுவன் என்று கூறினாராம். இதை கேட்டதும் யுவனுக்கு ஏதோ விருது வாங்கிய மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அண்மையில் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.