சிரஞ்சீவி படத்தில் நடிக்க இளம் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை | இம்மார்ட்டல் படம் குறித்து பகிர்ந்த இயக்குனர் | 'கர' படத்தில் வில்லத்தனம் கலந்த தனுஷ் | பராசக்தி படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க வேண்டியது : சுதா | சுந்தர் சி, விஷால் படத்திற்கு ‛புருஷன்' என தலைப்பு | ரூ. 31 கோடி வசூலைக் கடந்த சிறை : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | சிறிய நடிகருக்கு சம்பள பாக்கியை வைத்த ‛ஒய் நாட் ஸ்டுடியோஸ்' | சாய் பல்லவியைப் பாராட்டிய அமீர்கான் | ‛காந்தாரா' நாயகி சப்தமி கவுடாவின் படம் தமிழிலும் ரிலீஸாகிறது | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா |

செம்பருத்தி தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ஷபானா. இவர் கேரளாவை சேர்ந்தவர். விஜய் டிவி சீரியல் நடிகரான ஆர்யனை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஷபானா தற்போது மிஸ்டர் மனைவி தொடரில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஷபானா ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் சூப்பரான அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதாவது, ஷபானா தற்போது முறைப்படி நடனம் கற்றுக்கொள்ள நடன பயிற்சி வகுப்புக்கு சென்று கொண்டிருக்கிறாராம். மிகவிரைவில் கற்றுக்கொண்டு டான்ஸ் வீடியோ போடுவேன் என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதுவரை அழகான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த ஷபானா இனி நடனமாடியும் தனது ரசிகர்களை எண்டர்டெயின் செய்யப் போகிறார்.