சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஷபானா தற்போது மிஸ்டர் மனைவி என்கிற தொடரில் நடித்து வருகிறார். மக்கள் மத்தியில் இந்த தொடருக்கும், ஷபானாவுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால், ஷபானா இந்த தொடரிலிருந்து விலகுவதாக அண்மையில் செய்திகள் வெளியானது. இதனால், அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் ஷபானா கர்ப்பமாக இருப்பதால் தான் சீரியலை விட்டு விலகுவதாக கிசுகிசுக்க ஆரம்பித்தனர்.
இதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள ஷபானா, 'நான் சீரியலிலிருந்து விலகியது உண்மை தான். ஆனால், இது எனது எதிர்கால வாழ்க்கைக்காக எடுத்த முடிவு தானே தவிர வேறொன்றுமில்லை. நான் கர்ப்பமாக இல்லை. உண்மையில் அப்படி நடந்தால் சந்தோஷம் தான். சீக்கிரமே வேறொரு பெரிய ப்ராஜெக்டில் உங்களை சந்திக்கிறேன்' என்று கூறியுள்ளார்.