சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

மிர்ச்சி செந்தில், நித்யா ராம் ஆகியோர் நடிப்பில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா தொடருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த தொடரில் வீரலெட்சுமி என்கிற வீரா கேரக்டரில் முதலில் வீஜே தாரா தான் நடித்து வந்தார். சில தனிப்பட்ட காரணங்களால் அவர் அந்த சீரியலை விட்டு வெளியேறிவிட அதற்கு பதிலாக தர்ஷு சுந்தரம் நடித்து வந்தார்.
இந்நிலையில் தர்ஷுவும் தற்போது அண்ணா சீரியலை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இதனால் வீரலெட்சுமி கேரக்டரை பலரும் ராசியில்லாத கேரக்டர் என திட்டி வருகின்றனர். அதேசமயம் வீரா கேரக்டரில் நடிக்க டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கெளரியை சேனல் தரப்பில் கமிட் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. டான்ஸராக கலக்கிய கெளரி இனி நடிப்பிலும் சாதிப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.




