ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இதுவரை லட்சங்களில் சம்பளம் வாங்கி வந்த நடிகை அமலாபால், இப்போது திடுதிப்பென்று தனது சம்பளத்தை ஒரு கோடியாக உயர்த்திவிட்டார். வீரசேகரன், சிந்து சமவெளி போன்ற படங்களில் நடித்த நடிகை அமலாபால், மைனா படம் மூலம் பிரபலமானார். தொடர்ந்து தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, சேட்டை படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். பின்னர் தெலுங்கிற்கும் சென்று அங்கும் முன்னணி நடிகையாக உயர்ந்தார். இதுநாள் வரை தனது சம்பளத்தை ரூ.70 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை வாங்கி வந்தார். தற்போது தமிழில் விஜய், ஜெயம் ரவி போன்று டாப் நடிகர்களுடனும், தெலுங்கில் ராம்சரண் தேஜா, அல்லு அர்ஜூன் போன்ற ஹீரோக்களுடனும் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என்று எல்லாம் மொழியிலும் தொடர்ந்து டாப் ஹீரோக்களுடன் நடிப்பதால் தனது சம்பளத்தை ரூ.1 கோடியாக உயர்த்தி விட்டார்.