திரு மாணிக்கம் படத்தை பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த் | அப்பாவுடன் மோதும் அதிதி ஷங்கர்! | விடாமுயற்சி பின்வாங்கியதால் பொங்கல் ரேஸில் குட் பேட் அக்லி களம் இறங்குகிறதா? | சிவகார்த்திகேயன் நடிக்கும் 25வது படத்தின் டைட்டில் லீக் ஆனது! | 200 கோடி லாபத்தை நெருங்கும் 'புஷ்பா 2' | சிறு பட்ஜெட் படங்கள் தான் வாழ்வியலை பேசும்: சங்ககிரி ராஜ்குமார் சொல்கிறார் | தமிழ் படத்தில் லண்டன் நடிகை | மீண்டும் வருகிறார் 'ஆரண்ய காண்டம்' யாஸ்மின் பொன்னப்பா | வணங்கானில் உண்மை சம்பவம்: பாலா | பிளாஷ்பேக்: இரண்டு ஹாலிவுட் படங்களை காப்பியடித்து எடுக்கப்பட்ட 'ராஜபார்வை' |
எதிர்நீச்சல் தொடரில் ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் மிரட்டிக் கொண்டிருக்கிறார் நடிகை காயத்ரி. தவிரவும் சினிமா, வெப் தொடர்கள் என பிசியாக வலம் வரும் இவர், ஒரு பி.எச்டி பட்டதாரி ஆவார். மக்கள் மத்தியில் நற்பெயரை பெற்று வரும் காயத்ரி அடிக்கடி ஊடகங்களில் பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் மீடூ விவகாரம் குறித்து 'நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை குறித்து இப்போது சொல்லி வருகிறார்களே?' என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த காயத்ரி 'ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் அப்போதே அதை பற்றி சொல்லி விட வேண்டும். எல்லாம் முடிந்த பிறகு சொல்லி ஆறுதல் தேடுவது மிகவும் தப்பு' என்று கூறியுள்ளார். மேலும், 'அட்ஜெஸ்மெண்ட் பிரச்னைகளுக்கு காரணம் பெண்களின் வீக்னஸ் தான். மேலும் அட்ஜெஸ்மெண்ட் செய்வது அவர்களது தனிப்பட்ட விருப்பம். அதை பற்றி ஏன் நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள்?' என்று முன்னதாக அளித்த சில பேட்டிகளில் காயத்ரி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.