இந்தியன் 3 பிரச்னையை கேம் சேஞ்சருக்குள் கொண்டு வருவதா? - தில்ராஜு ஆவேசம் | ஜான்வி கபூரிடம் ஸ்ரீதேவியை பார்க்க முடியவில்லை : ராம் கோபால் வர்மா | ராஜமவுலி - மகேஷ்பாபு படம் ரிலீஸ் எப்போது? - ராம்சரண் ஆருடம் | கேரளா திரும்பியதுமே எம்.டி வாசுதேவன் நாயர் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய மம்முட்டி | இயக்குனர் ஷங்கர் தான் எனது இன்ஸ்பிரேஷன் : ராஜமவுலி | ஒரே நாளில் மோதிக்கொள்ளும் அஜித் - தனுஷ் படங்கள் | மகாநடி படத்தில் முதலில் நடிக்க மறுத்தது ஏன்? - மனம் திறந்த கீர்த்தி சுரேஷ் | லண்டனில் தயாராகும் வேலு நாச்சியார் படம் | பான் இந்தியா படமாக வெளியாகும் 'அகத்தியா' | என் வருமானத்தை தடுக்காதீர்கள் - ஷாருக்கான் ஆதங்கம் |
'வெங்காயம்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பயாஸ்கோப்' திரைப்படத்தில் சத்யராஜ், சேரன், சங்ககிரி ராஜ்குமார், சங்ககிரி மாணிக்கம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். முரளி கணேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு தாஜ்நூர் இசையமைத்திருக்கிறார். இந்த படம் நாளை வெளியாகிறது.
படத்தின் அறிமுக விழா நடந்தது. இதில் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பேசியதாவது : சுயாதீன திரைப்படங்கள் தான் மக்களின் பிரச்னையை பேசும் என்பதனை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். சிறிய முதலீட்டு திரைப்படங்கள் தான் மக்களின் வாழ்வியலையும், மக்களின் துக்கங்களையும் பேசுகின்றன. சிறிய முதலீட்டு திரைப்படங்களை உருவாக்கும் போது தான் படைப்பாளிகளுக்கு மனநிறைவு கிடைக்கும் என நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறேன்.
உலகம் முழுவதும் சுயாதீன திரைப்படங்களுக்கு பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. உங்களிடம் நல்லதொரு கதை இருக்கிறதா, அதனை படமாக படைப்பாக உருவாக்குங்கள் என்றுதான் நான் புதுமுக இயக்குநர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இதற்கான சந்தைப்படுத்துதல் என்பது கடினமாக இருந்தது. அதனை தற்போது புரொடியூசர் பஜார் மற்றும் ஆஹா பைண்ட் சந்தைப்படுத்தும். அதனால் கவலைப்பட வேண்டாம். உற்சாகமாக பணியாற்றுங்கள். இவர்கள் என்னை எப்படி காப்பாற்றினார்களோ, அதே போல் அனைத்து புதுமுக படைப்பாளிகளையும் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. வெங்காயம் படத்தினை வெளியிடுவதற்கு என்ன தடைகள் இருந்ததோ அதே தடைகள் பயாஸ்கோப் படத்திற்கும் இருந்தது. இவ்வாறு பேசினார்.