ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

'வெங்காயம்' படம் மூலம் கவனம் ஈர்த்தவர், சங்ககிரி ராஜ்குமார். இவர் அடுத்து இயக்கியிருக்கும் படம் 'பயாஸ்கோப்'. 25 டாட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் சந்திர சூரியன், பிரபு சுப்பிரமணி, பெரியசாமி தயாரித்துள்ளனர். முற்றிலும் கிராமத்து புதுமுகங்கள் நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜும், சேரனும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். முரளி கணேஷ் ஒளிப்பதிவு செய்ய, தாஜ்நூர் இசை அமைத்துள்ளார். வருகிற ஜனவரி 3ம் தேதி வெளியாகிறது.
படம் பற்றி சங்ககிரி ராஜ்குமார் கூறியதாவது : சினிமா பற்றி எதுவும் தெரியாத கிராமத்து மக்கள் சேர்ந்து ஒரு படத்தை எப்படி எடுத்தாங்க அப்படிங்கறதுதான் கதை. நான் 'வெங்காயம்' படத்தை என் சொந்த ஊர்ல எடுத்தேன். அப்ப எனக்கு நடந்த நகைச்சுவையான அனுபவங்களை திரும்பவும் ஒரு படமா உருவாக்கி இருக்கிறேன். ஏற்கெனவே எடுத்து ரிலீஸான படம், எப்படி எடுக்கப்பட்டதுன்னு ஒரு படமாக உருவாகுறது, தமிழ்ல இதுதான் முதல் முறை. ஒரு படம் உருவாகும்போது அதை எப்படி எடுத்தோம்னு அப்பவே எடுக்கிறது மேக்கிங் வீடியோ. இது அப்படியில்லை. அந்த சம்பவங்களை வச்சுகிட்டு ஒரு கதை ரெடி பண்ணி அதை படமாக்கி இருக்கேன். என்றார்.




