பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

சரத்குமாரின் 150வது படம் 'தி ஸ்மைல் மேன்'. இந்த படத்தை ஷியாம் - பிரவீன் இயக்கி உள்ளனர். இதில் சிஜா ரோஸ், பிரியதர்ஷினி, பேபி ஆலியா, சுரேஷ் சந்திரா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். படம் வருகிற 27ம் தேதி வெளியாகிறது. இந்த படம் அல்சைமர் என்ற நினைவு குறைபாடு அடைந்த ஒரு போலீஸ் அதிகாரி ஒரு முக்கியமான வழக்கை எப்படி துப்பறிந்து கண்டுபிடிக்கிறார் என்கிற கதை. இதுபோன்ற கதையில் ஹாலிவுட் படங்கள் சில வெளிவந்துள்ளது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சரத்குமார் பேசியதாவது : கிரைம் திரில்லர் படங்களை ரசிகர்கள் அதிகம் விரும்புகிறார்கள். ஒரு குற்றத்தை எப்படி துப்புதுலக்குகிறார்கள்? என்பதை அறிய ரசிகர்கள் விரும்புகிறார்கள். நடிகர்களை பொறுத்தவரை அர்ப்பணிப்பை கொடுக்கவேண்டும். தீர்வு ரசிகர்கள் கையில் தான் இருக்கிறது. சில நேரங்களில் கதைகளில் குழப்பங்கள் நேரிடலாம். அது சகஜம் தான். அதுவும் கிரைம்-திரில்லர் கதைகளில் எதுவும் நடக்கும்.
எனக்கு இது 150-வது படம். ஆனால் கணக்கு போட்டால் 150 இல்லையே... என்று தோன்றும். இந்த படம் அறிவிக்கும்போது எனக்கு இது 150-வது படம். ஆனால் தாமதமாக வந்திருக்கிறது. அதனால் தான் சற்று குழப்பம். படம் முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேசன் த்ரில்லர் என்பதால், உடனே கமிட் ஆனேன். இது எனது 150வது படம் என்பது இன்னொரு சிறப்பு.
இத்தனை படங்களிலும் நான் நடிக்க ரசிகர்களின் ஆதரவும், இறைவன் அருளும் தான் காரணம். என்னை சுப்ரீம் ஸ்டார் என்று ரசிகர்கள் அழைக்கிறார்கள். ஆனால் நான் சுப்ரீம் ஸ்டாரா? இல்லையா? என்பது எனக்கு தெரியாது. எப்போதும் ரசிகர்களின் அன்பும், ஆதரவும் தான் நான் விரும்பும் பரிசு என்றார்.




