அஜித்துக்கு பத்ம பூஷன் விருது: திரையுலகினர் வாழ்த்து | 50 நாளை நிறைவு செய்த 'புஷ்பா 2' | அரசியலுக்கு வருகிறாரா திரிஷா? லேட்டஸ்ட் தகவல் | ராஜமவுலி படத்துக்காக சிங்கத்துடன் சண்டை போடும் மகேஷ் பாபு! | ஹிந்தி ஆடியன்சை குறி வைக்கும் நாகசைதன்யா- சாய் பல்லவியின் தண்டேல்! | ஆங்கிலத்திலும் வெளியாகும் ரஜினியின் ஜெயிலர்-2 | அஜித்துக்கு பத்மபூஷண்…. வாழ்த்துவதில் ஏன் பாரபட்சம்…. | பிளாஷ்பேக்: சாதுர்யமிக்க இயக்கத்தால் சாதனை படைத்த “சாந்த சக்குபாய்” | விஜய்யின் கடைசி படம் ‛ஜனநாயகன்': பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | ‛‛நீங்க எல்லாரும் இல்லாம விருது கிடைத்திருக்காது'': பத்ம பூஷன் விருது பெற்றி ஷோபனா நெகிழ்ச்சி |
தமிழில் பட்டியல், பில்லா, ஆரம்பம் போன்ற படங்களை இயக்கியவர் விஷ்ணு வர்தன். கடந்த ஆண்டில் அவர் இயக்கத்தில் ஹிந்தியில் வெளிவந்த 'சேர்ஷா' படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஹிந்தியில் புதிய படம் ஒன்றைக் இயக்கவுள்ளார். இதில் நடிகர் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கின்றார். இதனை கரன் ஜோகர் அவரது தர்மா புரொடக்சன்ஸ் மூலம் தயாரிக்கின்றார். இப்படத்திற்கு 'தி பூல்' என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க திரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் ஒரு சில காரணங்களால் இதில் திரிஷாவிற்கு பதிலாக சமந்தா நடிப்பதற்காக படக்குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் 'புஷ்பா' படத்தில் சமந்தா நடனமாடிய 'ஊ சொல்றியா' பாடல் வட இந்திய ரசிகர்களை அதிகம் கவர்ந்ததால் வியாபாரத்திற்காக சமந்தாவை நடிக்க வைக்கின்றனர் என சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.