ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்ட வீராங்கனையான வேலு நாச்சியாரின் வரலாற்றை மையமாக கொண்டு 'வீரமங்கை வேலுநாச்சியார்' எனும் தலைப்பில் திரைப்படம் ஒன்று உருவாகிறது. டிரண்ட்ஸ் சினிமாஸ் பேனரில் ஜெ.எம்.பஷீர் தயாரிக்கும் இத்திரைப்படத்தை ஆர்.அரவிந்தராஜ் இயக்க, வேலுநாச்சியாராக முதன்மை வேடத்தில் நடித்து திரையுலகில் அறிமுகம் ஆகிறார் ஆயிஷா. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
முக்கிய பாத்திரமான பெரிய மருதாக இப்படத்தின் தயாரிப்பாளரும், 'தேசிய தலைவர்' திரைப்படத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவராக நடித்திருப்பவருமான ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார். இவரது மகள் தான் ஆயிஷா என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் பஷீர் பேசுகையில், ‛‛வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை திரையில் கொண்டு வருவதில் மிகவும் பெருமை அடைகிறோம். இதில் முதன்மை வேடத்தில் எனது மகள் ஆயிஷா நடிப்பது பெரும் மகிழ்ச்சி.
நமது நாட்டுக்காகவும், தேச விடுதலைக்காகவும் தன்னலம் இன்றி போராடிய மாபெரும் ஆளுமைகள் குறித்து இன்றைய இளைய சமுதாயம் அறிவது அவசியம். இதன் காரணமாகவே 'தேசிய தலைவர்' மற்றும் 'வீரமங்கை வேலுநாச்சியார்' உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறேன்,'' என்றார்.
'தேசிய தலைவர்' திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ள நிலையில் அதை தொடர்ந்து 'வீர மங்கை வேலு நாச்சியார்' படப்பிடிப்பு தொடங்கும் என்று பஷீர் கூறினார்.