மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
இயக்குனர் மற்றும் இசையமைப்பாளரான கங்கை அமரனின் மூத்த மகன் வெங்கட் பிரபு படங்கள் இயக்கி வரும் நிலையில், அவரது இளைய மகனான பிரேம்ஜி காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். அதேபோன்று சில படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார். மேலும் தற்போது 44 வயதாகும் பிரேம்ஜி இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. அவருக்கு திருமணம் செய்வதற்கு பெண் பார்க்கப்பட்டு வந்தபோது அவர் தாயார் இறந்து விட்டதால் அதன் பிறகு பெண் பார்ப்பதை நிறுத்தி வைத்திருந்தார்கள்.
இந்த நிலையில் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், 2024ம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ள பிரேம்ஜி, இந்த ஆண்டு நான் நிச்சயமாக திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்றும் தெரிவித்திருக்கிறார். என்றாலும் இப்படித்தான் பல வருடங்களாக சொல்லிக் கொண்டு வருகிறீர்கள். திருமணம்தான் நடந்த பாடில்லை என்று நெட்டிசன்கள் அவரது பதிவுக்கு கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.