மொழி சர்ச்சை... கர்நாடகாவில் வலுக்கும் எதிர்ப்பு : மன்னிப்பு கேட்க முடியாது என கமல் திட்டவட்டம் | 7 ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ரிலீஸ் | விஜய் தேவரகொண்டா படத்தால் சூர்யா படத்தை கைவிட்ட கீர்த்தி சுரேஷ் | கூலி படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2விலும் நாகார்ஜூனா? | ''நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்'': எதை சொல்கிறார் மணிரத்னம்? | இட்லி கடை ரிலீஸ் தேதியில் சூர்யா 45 | தியேட்டரில் வெளியாகும் 'பறந்து போ' | என்னை பற்றிய பதிவுகளை நீக்க வேண்டும்: ஆர்த்திக்கு, ரவி மோகன் நோட்டீஸ் | மீண்டும் இணையும் வடிவேலு - பார்த்திபன் | பிளாஷ்பேக்: பூமியில் வாழ்ந்த கடவுள் 'என்.டி.ஆர்' |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 68 -வது படத்திற்கு கோட்(Greatest Of All Time) என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது. அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், வெங்கட் பிரபுவின் சோசியல் மீடியாவில் ஒரு ரசிகர் சில கருத்துக்களை டேக் செய்திருக்கிறார்.
அதில், கடந்த 2023 ஆம் ஆண்டு வாரிசு, லியோ போன்ற படங்கள் விஜய்க்கு தோல்வியாக அமைந்தன. அதனால் 2024ல் பெரிய வெற்றியை எதிர்பார்க்கிறார். இந்த நேரத்தில் நீங்கள் ஏதேனும் ஹாலிவுட் ரீமேக் படத்தை இயக்க திட்டமிட்டு இருந்தால் அதை கைவிட்டு விடுங்கள். காரணம், விஜய் ஒன்றும் அஜித்தோ, மகேஷ் பாபுவோ அல்ல. சில தெலுங்கு ரீமேக் படங்கள் மட்டுமே விஜய்க்கு வெற்றியை கொடுத்துள்ளன. அதில் கிடைத்த வெற்றியால்தான் அவர் திரை உலகில் நிலைத்திருக்கிறார். அதனால் ஹாலிவுட் படத்தை விஜய்க்காக ரீமேக் செய்யும் வேலையை விட்டுவிட்டு ஒரு நல்ல தெலுங்கு படத்தை வாங்கி ரீமேக் செய்து ஒரு வெற்றி படத்தை கொடுங்கள். அதோடு இதற்கு முன்பு ஹாலிவுட் படங்களை சுட்டு வெளியான லியோ படத்தின் தோல்வியை மனதில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இதற்கு வெங்கட் பிரபு பதிலளிக்கையில், மன்னித்து விடுங்கள் சகோதரரே. நான் உங்களிடம் இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன். புத்தாண்டு வாழ்த்துக்கள். அன்பை மட்டுமே பகிருங்கள் என்று எக்ஸ் பக்கத்தில் அந்த ரசிகருக்கு ஒரு பதில் கொடுத்துள்ளார்.