'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தமிழில் தடையறத் தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ரகுல் பிரீத் சிங். தற்போது அயலான், இந்தியன்-2 போன்ற படங்களில் அவர் நடித்திருக்கிறார். மேலும் பாலிவுட் சினிமாவில் பல படங்களை தயாரித்தவரும், நடிகருமான ஜாக்கி பக்னானி என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வரும் ராகுல் பிரீத் சிங், 2024 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில் தற்போது வருகிற பிப்ரவரி 22ஆம் தேதி கோவாவில் ராகுல் ப்ரீத் சிங், ஜாக்கி பக்னானி ஆகியோரின் திருமணம் நடைபெற இருப்பதாக பாலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக உள்ளது. ஜாக்கி பக்னானி, த்ரிஷா கதையின் நாயகியாக நடித்து வெளியான மோகினி என்ற படத்தில் சந்தீப் என்ற ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.