37 வருட கிடப்பிற்குப் பிறகு வெளியாகும் ரஜினிகாந்தின் ஹிந்திப் படம் | ஆஸ்கர் விருது : நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத 'ஹோம்பவுண்ட்' | ‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா | 'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் |

1974ம் ஆண்டு சிவக்குமார் நடிப்பில் வெளியான 'ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரா.சங்கரன். தேன் சிந்துதே வானம், தூண்டில் மீன், வேலும் மயிலும் துணை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கம் தவிர நடிப்பிலும் கவனம் செலுத்தினார். புதுமைப்பெண், ஒரு கைதியின் டைரி, மவுன ராகம் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். பல படங்களில் கதாநாயகிகளுக்கு தந்தையாகவும் நடித்துள்ளார்.
மவுனராகம் படத்தில் ரேவதியின் தந்தையாக சந்திரமவுலி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் 'மிஸ்டர் சந்திரமவுலி' என அவரை அப்படத்தின் நடிகர் கார்த்திக் அழைக்கும் காட்சி திரைப்பட ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் சங்கரனை பிரபலமாக்கியது. 1999க்கு பின் எந்த படங்களிலும் அவர் நடிக்கவில்லை. இந்த நிலையில் 91 வயதாகும் ரா.சங்கரன் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.