ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ |
தனது அப்பா கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை, நடிகை ஸ்ருதிஹாசன் தவறவிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் மூத்தமகள் ஸ்ருதிஹாசன். லக் என்ற இந்தி படத்தின் மூலம் ஹீரோயினாக அவதரித்தார். ஆனால் அந்த படம் அவருக்கு லக்காக அமையவில்லை. பின்னர் தெலுங்கில் ஒரு படம் நடித்தார், அதுவும் சரியாக போகவில்லை. தொடர்ந்து தமிழில் சூர்யாவுடன் 7ம் அறிவு மற்றும் தனுஷ் உடன் 3 படங்களில் நடித்த ஸ்ருதிக்கு ஓரளவு நல்ல பெயர் கிடைத்தது. பின்னர் தெலுங்கில் அவர் நடித்த கப்பார் சிங் மாபெரும் வெற்றி பெற முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது 6 படங்களில் பிஸி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனே இயக்கும் பிட்டர் சாக்லேட் என்ற படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அந்தபடத்தில் தான் நடிக்கவில்லை என்று ஸ்ருதி கூறியுள்ளார். தனக்கு படம் பிடிக்கவில்லை என்பதால் அவர் இப்படத்தில் நடிக்கவில்லையாம், மாறாக தற்போது அவர் நிறைய படங்களில் நடிப்பதால் தன்னிடம் கால்ஷீட் இல்லை என்பதால் இப்படத்தை மறுத்து இருக்கிறார்.
இதுகுறித்து ஸ்ருதிஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது. அப்பா படத்தில் நடிக்காதது கவலையாகத்தான் இருக்கிறது. காரணம் என்னிடம் கால்ஷீட் இல்லை, அடுத்தமுறை வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே கமலின், உன்னைப்போல் ஒருவன் படத்தில், நடிகை ஸ்ருதி இசையமைப்பாளராகவும், ஒருபாட்டில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.