விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமண ஏற்படுகள் தீவிரம் | தெலங்கானா : டிக்கெட் கட்டண உயர்வுக்கு 90 நாள் விதி | 'இளையராஜா' பயோபிக் இந்த வருடமாவது ஆரம்பமாகுமா ? | 'ஜனநாயகன்' வழக்கு விவகாரம் : அடுத்து என்ன நடக்கலாம்? | மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி |

நடிகர் கவின் இளன் இயக்கத்தில் 'ஸ்டார்' படத்திலும், சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்திலும் நடித்து வருகிறார்.
மேலும் இயக்குனர் நெல்சன் முதல் முறையாக தயாரிக்கும் படத்தில் கவின் ஹீரோவாக நடிக்கின்றார். இப்படத்தை நெல்சனின் உதவி இயக்குனர் சிவபாலன் என்பவர் இயக்குகிறார் என தகவல்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
இந்த நிலையில் இதில் கதாநாயகியாக பிரியங்கா மோகனும் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான படப்பிடிப்பு மைசூரில் துவங்கியுள்ளதாம். மேலும், இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கின்றார் .இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.




