மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் | உங்களை ஏமாற்ற மாட்டேன் லாலேட்டா : மோகன்லால் மகளை அறிமுகப்படுத்தும் இயக்குனர் உறுதி | சினிமாவில் ஒரு வட்டத்துக்குள் சிக்க விரும்பவில்லை: கிரேஸ் ஆண்டனி | சுரேஷ் கோபி பட சென்சார் விவகாரம் : சனிக்கிழமை படம் பார்க்கும் நீதிபதி | கவுதம் ராம் கார்த்திக் படத்தில் இணையும் பிரபலங்கள் | மீண்டும் ஒரு லெஸ்பியன் படம் | வரி உயர்வு : ஆகஸ்ட் முதல் படங்களை வெளியிடப் போவதில்லை : புதுச்சேரி விநியோகஸ்தர்கள் அறிவிப்பு | இங்கே ஹோம்லி, அங்கே கவர்ச்சி : ராஷ்மிகாவின் அடடே பாலிசி | பிளாஷ்பேக்: வசுந்தரா தாசை நிராகரித்த மணிரத்னம் | பிளாஷ்பேக்: எம்ஜிஆரின் நிறைவேறாத கனவு |
கடந்த 2017ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வெளியான படம் துப்பறிவாளன். அதன்பிறகு அப்படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கப் போவதாக 2019ம் ஆண்டு அறிவித்தார்கள். இங்கிலாந்தில் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்தபோது விஷாலுக்கும் மிஷ்கினுக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அப்படம் கிடப்பில் போடப்பட்டது. அதையடுத்து தானே துப்பறிவாளன்- 2 படத்தை இயக்கி நடிக்கப் போவதாகவும் கூறியிருந்தார் விஷால். என்றாலும் அதன் படப்பிடிப்பு நடத்தப்படாமல் வேறு படங்களில் அவர் நடித்து வந்தார்.
இந்நிலையில் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து வரும் ரத்னம் படத்தின் ரிலீசுக்கு பிறகு துப்பறிவாளன்-2 படத்தை இயக்கி நடிக்கப் போவதாக விஷால் கூறிய நிலையில், 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது நடித்து வரும் ரத்னம் படத்தை அடுத்து எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருக்கும் விஷால், துப்பறிவாளன்-2வுக்கு பிறகுதான் புதிய படத்தில் கமிட்டாவார் என்றும் கூறப்படுகிறது.