ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சாதாரணமாகவே, எந்த சினிமா விழாக்களில் கலந்து கொண்டாலும், அங்கு கூடியிருக்கும் இளசுகள், பெருசுகள் அனைவரையும், "மச்சான்ஸ் என்று அழைத்து கிளுகிளுப்பு செய்வார் நமீதா. விழா முடிந்து செல்லும்போது, ரசிக கோடிகளை நோக்கி, பறக்கும் முத்தங்களையும் வாரி வழங்கிவிட்டே செல்வார்.
அப்படிப்பட்ட நமீதா, சமீபத்தில் சென்னையில் நடந்த, ஒரு குறும் படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டார். அப்போது அப்படத்தின் இயக்குனர், மேடைக்கு, தன் அப்பா, அம்மாவை வரவைத்து, அவர்களுக்கு முத்தம் கொடுத்து, தன் அன்பை வெளிப்படுத்தினார். அதைப்பார்த்த நமீதா, தன் கன்னத்திலும் முத்தம் கொடுக்கும்படி, சைகையால், அவரிடம் ஜாலியாக கேட்டார். அதையடுத்து, அரங்கினுள் கைதட்டல்கள் காதுகளை கிழித்தன. ஆனால், இயக்குனர், நமீதாவுக்கு முத்தம் கொடுக்காத போதும், தான் வழக்கம்போல, ரசிகர்களுக்கு முத்தங்களை பறக்க விட்டு, கூல் பண்ணினார் நமீதா.