ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
இயக்குனர் அட்லி தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றி படங்களை தந்தார். சமீபத்தில் அவர் இயக்கத்தில் ஹிந்தியில் வெளிவந்த 'ஜவான்' திரைப்படமும் வெற்றி பெற்றது. அவர் 'A For Apple Studios' என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தக்காரம் ஆகிய படங்களை தயாரித்திருந்தார்.
சமீபத்தில் அட்லி அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, "இப்போது எனது தயாரிப்பு நிறுவனம் மூலம் ஹிந்தியில் வருண் தவானை வைத்து தெறி படத்தை ரீ-மேக் செய்து தயாரித்து வருகிறேன். இதைத்தொடர்ந்து தமிழில் இரண்டு படங்கள் மற்றும் தெலுங்கில் ஒரு படத்தையும் தயாரிக்கிறேன். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்'' என தெரிவித்துள்ளார்.